Rains will continue in Tamil Nadu, information is available
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என தகவல்
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில்
மழை தொடரும் என தகவல்.
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை
தொடரும் என தகவல்
தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால்
பகுதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம்,
செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர்,
சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட
பகுதிகளிலும் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (அக்.22) விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பொழிவு
இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக
அமைந்துள்ளது.
NOTE: The Study Materials from our site are not created by us. This
Materials are for only Educational and Competitive Exam Purpose. All the
credits go for the creators. Who created the study materials for the
teachers of world.


No comments